புதுச்சேரியில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா தொடக்கம் – வானில் பறந்து புதுவையின் பசுமை அழகை ரசிக்கும் புதிய அனுபவம்

புதுச்சேரி சுற்றுலா துறை, உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையின் இயற்கை அழகை வானில் இருந்து கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார்.

சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் புதுச்சேரியின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் வானில் இருந்து கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு பயணத்திற்கும் ஒருவருக்கு ரூ.5,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொகுசான ஹெலிகாப்டரில் ஆறு பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்கலாம்.

தற்போது, இந்த சுற்றுலா மாதத்தில் மூன்று முறை மட்டுமே நடத்தப்படுகிறது. வருங்காலங்களில் இதை தொடர்ந்து விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஹெலிகாப்டர் நிறுவனத்தின் சேர்மன் தெரிவித்துள்ளார்.

வானில் பறந்து புதுச்சேரியின் பசுமை, கடற்கரை மற்றும் நகர அழகை ரசித்த சுற்றுலா பயணிகள், “இது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *