கோயிலில் தொலைந்த 4 பவுன் தாலி செயினை கண்டுபிடித்த மேஸ்திரிக்கு பாராட்டுகள்!
புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் மனைவி கீதா தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவரின் கழுத்திலிருந்த 4 பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் இணைந்து நகையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாகூரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரவிச்சந்திரன் அந்த தாலி செயினை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் காவல்துறையினர் அந்த நகையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
சமூக பொறுப்புடன் நடந்துகொண்ட மேஸ்திரி ரவிச்சந்திரனுக்கு கோயில் நிர்வாகம், பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

