கோவையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் திருமணம்: ஈஷா யோகா மையத்தில் எளிய மரபுவழி நிகழ்வு
நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜ் கோவை நகரில் இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரின் திருமணமும் கோவை ஈஷா யோகா மையம் வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயில் பகுதியில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம் எளிமையாகவும் ஆன்மீக சூழலில் நடைபெற ஆனது குறிப்பிடத்தக்கது.
ஈஷா மையம் தனது மனதிற்கு மிக நெருக்கமான இடம் என சமந்தா பலமுறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அந்த விருப்பத்திற்கிணங்க, தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மிகவும் விரும்பும் இடத்திலேயே தொடங்கியுள்ளார்.

