ஜனநாயகன்’ மேடையில் ‘அசுரன்’
வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒட்டி ரசிகர்களிடையே பேரதிர்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் என்பதோடு, தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நட்சத்திரங்கள் ஒரே மேடையில் வரவிருப்பதால், அந்த விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு கொண்டாட்டமாக அமையும் என கூறப்படுகிறது.

