புதுவை தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றம் திறப்பு – 1500 பேருக்கு நலத்திட்ட சேவைகள் வழங்கல்
புதுவை, தவளக்குப்பம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தின் திறப்புவிழா நடைபெற்றது. புதுவையில் 15வது மன்றமாக தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றத்தின் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருவது JCM மக்கள் மன்றத்தின் முக்கியமான நோக்கமாகும்.
விழாவில் பேசிய ஜோஸ் சார்லஸ் மாட்டின்,
“இந்த மாத இறுதிக்குள் மேலும் 30 மக்கள் மன்றங்களை புதுவை முழுவதும் நிறுவத் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார். மேலும், தற்போது மன்றங்களுக்கு இடங்களை வாடகைக்கு எடுப்பதில் சில அரசு நிலைப்பாடுகள் காரணமாக சிரமம் ஏற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுவை முழுவதும் மக்கள் நலத்திட்ட பணிகளின் அணுகலை அதிகரிக்க இந்த புதிய மன்றத்தின் திறப்பு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

