த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் அரசியல் விவாதம்
பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில், தவக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் தொடர்பான நிலவரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், மேலும் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச்செயலாளர் ஆனந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதனால், தவக கட்சிக்குள் முக்கிய மாற்றங்கள் அல்லது புதிய அரசியல் முடிவுகள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

