போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் அதிரடி: முன்னாள் IFS அதிகாரி கைது
ஓசூர்: போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடர்புடைய வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை, ஓசூர் அருகே CBCID போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி மருந்து விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில், GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தொடர்புடைய ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

