LJK | முருகன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை
புதுவை உழவர்கரை தொகுதியில் உள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் ஸ்ரீசக்திவேல் முருகன் ஆலயத்தின் திருப்பணிகளுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த நன்கொடையை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின். முருகன் கோவிலின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்கும் நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், பகுதி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த உதவி ஆலய திருப்பணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

