2026 விண்வெளிப் பயணம் ஆரம்பம்! 12-ஆம் தேதி புறப்படும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-C62

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் விண்வெளி பயணமாக பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டை ஜனவரி 12 ஆம் தேதி காலை 10:17 மணிக்கு ஏவ உள்ளது. இந்த ஏவல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து நடைபெற உள்ளது.

இந்த ராக்கெட், குறிப்பிட்ட விண்வெளி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மேற்கொள்ளப்படும் 105வது விண்வெளி ஏவல் என்ற சிறப்பு அடையாளத்தை இந்த பணி பெற்றுள்ளது. ஏவல் தொடர்பான தகவலை, இஸ்ரோ தனது சமூக வலைதளமான ‘X’ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *