இலங்கை கடற்படை கைது பிரச்சனைக்கு தீர்வு முயற்சி – LJK தலைவர் பேச்சுவார்த்தை
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காரைக்கால் மீனவர்களின் பிரதிநிதிகள், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், மீனவர் கைது சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள், இலங்கை அரசு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இலங்கையில் , தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 19 படக்கள் மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை துணைத் தூதரக துணை தூதர் கணேசநாதன் கேதீஸ்வரன், LJK பொதுச்செயலாளர் துரைசாமி, JCM மக்கள் மன்ற பொருளாளர் அயூப் கான், மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித் மற்றும் மாநில செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

