admin

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது…

Read More

வணிகர்கள் உரிமை மாநாடு: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று செவ்வாய்கிழமை (23-09-25) மாலை நடக்கிறது. மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார், புதுவை வணிகர்கள்…

Read More

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது – உல்லாசத்தில் ஈடுபட்டது அம்பலம்

ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுவதும்…

Read More

சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா…

Read More

மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அசுத்த குடிநீரை குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல்…

Read More

வாங்கிய கடனுக்கு பதில் அளிக்காத ரவி மோகன்… வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்…

நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். ரவி மோகன் மீது…

Read More

தோல்வியை சந்திக்காத இந்திய அணிக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?

ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தோல்வியை தழுவாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்திய அணி. லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது அபார…

Read More

வெள்ளவாரி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஜே.சி.எம். மக்கள் மன்றம் – பொதுமக்கள் நன்றி

காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலிலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. உப்பனாறு வாய்க்கால் மேம்பாலத்தை…

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் அதிரடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். மறைந்த மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் துணைவியாரும், நடிகை மற்றும் பாஜக தலைவருமான ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதாவின் மறைவையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “திரை உலகில் எத்தனை பேர்…

Read More

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More