SS News

அமெரிக்கா : சட்டவிரோதமாக தங்கியிருந்த 475 பேர்… கார் உற்பத்தி ஆலையில் வேலை…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்தோடு அவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனம் ஒன்றின் கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்து…

Read More

அஜித் வந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்’ – விஜய் மீது சீமான் கடும் தாக்கு

நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா ஆகியோர் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை….

Read More
SS News

திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. அதிமுக காணாமல் போகும்.. – புகழேந்தி அதிரடி

திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து…

Read More
JCM

தன்னார்வ பணிகளை அதிகாரிகள் தடுத்து மிரட்டல்… ஜே.சி.எம். நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு

ஜே.சி.எம். மக்கள் மன்றம் செய்யும் தன்னார்வப் பணிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும், நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜே.சி.எம். மக்கள் மன்றம் முன்னெடுக்கும் தன்னார்வ பணிகளை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோடு, மிரட்டலும் விடுத்து வருவதாக நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.சி.எம். மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’ஒவ்வொரு மழைக்கும் புதுச்சேரியின் கிருஷ்ணா நகர்,…

Read More
JCM

கால்வாய்களைத் தூர்வார விடாமல் தடுத்த நபர்கள்! எதிர்க்குரல் எழுப்பி ஓடவிட்ட மக்கள்!…

ஜேசிஎம் மக்கள் மன்றம் சார்பாக, புதுச்சேரியில் தூர்வாரும் முன்னெடுப்பு நடைபெற்ற போது, தடுக்க முயன்ற சிலரை, பொதுமக்கள் எதிர்குரல் எழுப்பி ஓடவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை என்றாலே பலருக்கும் ஆனந்தம் தான். ஆனால், புதுச்சேரியில் ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழை என்றாலே அச்ச உணர்வு தான் மேலோங்குகிறது. காரணம், சிறுமழை பெய்தாலே, வீட்டிற்குள் கழிவு நீர் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது. பெரும்மழை என்றால் சொல்லவே வேண்டாம். இந்தப்…

Read More
JCM

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? – ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னென்ன மாற்றங்கள்?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று புதன்கிழமை (03-09-25) அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

Read More
JCM

‘ரோபா சங்கருக்கு இப்படி ஒரு நிலையா?…’ டி.ராஜேந்தர் உருக்கம்… திரைத்துறையினர் அதிர்ச்சி…

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக…

Read More
JCM

‘கச்சத்தீவை கொடுக்க முடியாது’ – விஜய்க்கு எதிராக இலங்கை அதிபர் பேச்சு

கச்சத்தீவு இலங்கைக்குரியது என்றும் அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை (01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவல் துறையில் இருந்து கடற்படையினரின் 4 படகுகளில் கச்சத்தீவுக்கும் பயணமானார். கச்சதீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாலை 6 மணிக்கு…

Read More