எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது….

