பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு!

பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பசுமை தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்….

Read More