ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின் குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து வெல்லந்தாங்கி அய்யனார் கோவில்…

