அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.
சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச்…

