சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம் : தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவே சர்ச்சைக்கு காரணம்
மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த செயலியை முன்பே நிறுவி, அதை நீக்க முடியாத வகையில் வைத்திருக்க வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் நவம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவே சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவின்படி, 90 நாளில் அமல்படுத்தவும், 120 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது….

