
பேராசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிருப்தி
பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி அரசு கல்லூரிகளில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும், பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது. இது மாணவர்களுக்கான கல்வியின் தரத்தைப் பாதிக்கும்…