
கடற்கரை தூய்மை பணியில் இணைந்த துணைநிலை ஆளுநர் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் தூய்மை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், தலைமைச் செயலர் சரத் சவுகான், கடலோர காவல் படை கமாண்டர் DIG தசீலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், சமூக அலுவலர்கள்…