பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட…

Read More

அண்ணாமலையார் கோயில் தீபத்திற்கான கொப்பரை : மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கான கொப்பரை மலைமேல் எடுத்து செல்லும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. பஞ்சலோகத்தில் தயாரிக்கப்பட்ட, சுமார் 2.5 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு கொப்பரை, தீபத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சிக்கு ஏற்றப்படுகிறது. 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் உச்சியை நோக்கி, கோயில் ஊழியர்கள் மற்றும் துறவிகள் இணைந்து கொப்பரையை மரியாதையுடன் எடுத்துச் செல்கின்றனர். மலையை ஏறுவது சிரமமான பணியாக…

Read More

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்தாண்டும் மிகுந்த பக்தி பேரரவத்துடன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் உள்ள…

Read More