தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read More