
மேலும் 2 மேம்பாலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!
புதுச்சேரியில் மேலும் இரண்டு மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளன. மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை, நகர வளர்ச்சி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் போக்குவரத்து…