அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாகிறது – ஏ.எல். விஜய் இயக்கும் வாய்ப்பு?
திரையுலகில் மட்டுமல்லாமல் கார் பந்தய உலகிலும் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ள நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று வருகின்றார். பந்தயம் முடிந்ததும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அஜித்தின் 64வது திரைப்படமாகும். இதற்கிடையில், அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படம் உருவாகி வருகிறது என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க…

