LJK மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா – திருநங்கை சமூகத்துடன் கொண்டாட்டம்
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு, அவர்களுடன் அன்பும் ஒற்றுமையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது திருநங்கைகளுக்கு புடவை, மளிகைப் பொருட்கள் மற்றும் காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

