புதுச்சேரியில் வண்ணமயமான அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்டல்…
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ், வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இந்நாளை, கிறிஸ்தவர்கள் தங்களது இல்லங்களில் குடில் அமைத்து, இயேசு சொரூபத்தை வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். இதற்காக வீடுகளில் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்களை அமைத்து அழகுபடுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் விதவிதமான வண்ணங்களிலும் புதிய வடிவங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைப்பதற்கு…

