காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!
புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுவையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,…

