த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க. வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?
பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்…

