மதுரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – அவனியாபுரத்தில் போட்டிகள் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் வாடிவாசலுக்குள் சீறிப்பாய, மாடு பிடி வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தி போட்டியிட்டு வருகின்றனர். வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகனங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், கண்காணிப்பு பணிகள் ஆகியவை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொது…

Read More

பொங்கல் விழா முன்னெடுப்பு: முதலமைச்சரை சந்தித்த LJK தலைவர்

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த மரியாதைச் சந்திப்பு, பொங்கல் விழா தொடர்பான அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல…

Read More

இலங்கை கடற்படை கைது பிரச்சனைக்கு தீர்வு முயற்சி – LJK தலைவர் பேச்சுவார்த்தை

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காரைக்கால் மீனவர்களின் பிரதிநிதிகள், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில், மீனவர் கைது சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள், இலங்கை அரசு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைக்க…

Read More

பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா – குத்துவிளக்கேற்றி கொண்டாடிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரியில், பழங்குடியின மக்களுடன் இணைந்து LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். விழாவின் தொடக்கமாக அவர் குத்துவிளக்கேற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ,உற்சாகமும் நிறைந்த சூழல் காணப்பட்டது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன்,…

Read More

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை

மகளிர் பிரீமியர் லீக் (WPL) T20 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற தொடரின் 3-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை…

Read More

கிரிக்கெட் உலகில் புதிய உச்சம்: ரோஹித் சர்மாவின் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் இந்த சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் வைத்திருந்தார். 328 சிக்ஸர்கள்…

Read More

பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில்…

Read More

க*சா பயன்பாடு அதிகரிப்பு – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை கண்ணகி நகர் அருகே க*சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக , அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், குற்றப் பின்னணி உள்ளவரை முறையாக கண்காணிக்கத்…

Read More

சென்னையில் காங்கிரஸின் அமைதிப் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு “வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி–ஜி ராம் ஜி)” என மாற்றியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, இந்த முடிவு ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி…

Read More

“இந்தியா இந்து நாடு; பிரதமரும் இந்துவே” – சர்ச்சை கருத்து

மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி தெரிவித்த கருத்துகளுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எந்த குடிமகனும் பிரதமராக பதவியேற்க முடியும் என்றும், அதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்து நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடு என்றும் கூறிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் பிரதமர்…

Read More

பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Read More

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீச்சு : பாதுகாப்பு காரணமாக விரைவு ரயில் நிறுத்தம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது . இதனால் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரான பின்னர் மட்டுமே ரயில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Read More

இமாசலில் பஸ் விபத்து: 14 பேர் பலி; பிரதமர் இழப்பீடு

இமாசல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது . இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,…

Read More

சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்

சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் . தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

Read More

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம நிர்வாகம் நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை தனிநபர்கள் அல்லது உள்ளூர் குழுக்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசே நேரடியாக பொறுப்பேற்று போட்டிகளை நடத்துவது சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அணிவகுப்பு, அவனியாபுரம், பாலமேடு மற்றும்…

Read More

சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்

சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம்…

Read More

2026 தேர்தல்: அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக

சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இறுதி பேச்சுவார்த்தை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அன்புமணி ராமதாஸ் . இதன் மூலம் ராமதாஸ் விஜய் உடன்…

Read More