புதுச்சேரி கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை செய்து, தீபாவளி போனஸ் ₹6,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் கிடையாது என்ற தகவல் பரவியதால் பரபரப்பும் ஏற்பட்டது. அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

Read More

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. புதுச்சேரி  அரசில் பணிபுரியும் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் தொகை ரூ.6,908 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமே…

Read More