டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

