2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு இந்தியா அவுட் – தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை

கவுகாத்தி: கவுகாத்தியின் பர்சாபரா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 489 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோர் அமைத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் சொதப்பினர்.தென் ஆப்ரிக்க…

Read More

டெம்பா பவுமா – தோல்வியே சந்திக்காத டெஸ்ட் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தனது டெஸ்ட் தலைமையில் இதுவரை ஒரு தோல்வியும் காணாத கேப்டனாக புதிய உயரங்களைத் தொட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த த்ரில் வெற்றியுடன், அவரது சாதனை மேலும் வலுவடைந்துள்ளது. 2023 முதல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியை வழிநடத்தி வரும் பவுமா, முதல் கறுப்பின டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று வரலாற்றுப் பொறுப்பை சுமப்பதோடு பல முக்கிய சாதனைகளையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை…

Read More

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா வெற்றி – இந்தியா ஏன் தோற்றது?

தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், 2 டெஸ்ட், 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டரை நாட்களில் முடிவுக்கு வந்த இந்த டெஸ்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கா வெற்றி சாதித்துள்ளது. இந்தியாவும் 13 ஆண்டுகளுக்குப்…

Read More

நிதிஷ் ரெட்டியை கழட்டிவிட்ட கம்பீர்… பிளேயிங் லெவனில் இவருக்கும் இடமில்லை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (நவம்பர் 14) கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா தலைமையேற்கிறார். இந்நிலையில், சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஈடன் கார்டன்ஸில் டெஸ்ட் ஆட உள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கு வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் ஆடி வெற்றி பெற்றது. ரெட் பால் டெஸ்ட் பார்த்தால்,…

Read More

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி! 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. நவம்பர் 2 அன்று மழையால் இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ்…

Read More