காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!

புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து…

Read More

திருநள்ளாறு தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்! களத்தில் இறங்கிய JCM மக்கள் மன்றத்தினர்!

புதுவை மாநிலம் திருநள்ளாறு தொகுதி கருக்கங்குடி கிராமத்தில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி, திருநள்ளாறு தொகுதி JCM மன்ற தலைவர் G.V. பிரபாகரன் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களை நேரில் சந்தித்து தார்ப்பாய் வழங்கும் நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Read More

திருவண்டார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்பு: மாணவிகளுக்கு MLA அங்காளன் வழங்கிய மதியஉணவு

திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கான பொது தேர்வு தயாரிப்பு சிறப்பு வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி 100-ற்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளுக்கு சிற்றுண்டி அல்லது உணவு வழங்க வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் விண்ணப்பித்ததை தொடர்ந்து, திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. பா. அங்காளன் MLA அவர்கள் இன்று பள்ளியை…

Read More

டெல்லி கார் வெடிப்பு- புதுச்சேரியில் ஜே.சி.எம். மக்கள் மன்றத்தின் மெழுகுவர்த்தி ஊர்வலம்

டெல்லியில் நிகழ்ந்த துயரமான கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் இன்று அமைதி மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தினர். அண்ணா சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று, தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம் அருகே ஊர்வலம் நிறைவுற்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த அமைதி…

Read More

முன்னாள் அமைச்சர் ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் – JCM மக்கள் மன்றம் மரியாதை

புதுச்சேரி:முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சார்பில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் புதுச்சேரி வைஷியால் வீதியில் உள்ள கண்ணனின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணனிடம் ரீகன் ஜான்குமார் சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கை மூட அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக்…

Read More

புதுச்சேரிக்கு ஒரு வழி பாதை மிகவும் தேவை! – சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து பலர் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். “புதுச்சேரியில் ஒருவழிப்பாதை தேவை என்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால், கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் ரங்கசாமியே சிக்கிக்கொண்டார். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை…

Read More

MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டனர். புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களில் மரக்கிளைகள் படர்ந்து இருப்பதால் அவ்வப்போது மின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய…

Read More