பொங்கலுக்கு பிறகு பாதயாத்திரை – LJK தலைவர் அறிவிப்பு
புதுவை : புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுவை முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதுவை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து, அவர்களது கோரிக்கைகளை கேட்கும் நோக்கில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், பாதயாத்திரையின் போது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பாதயாத்திரை தொடங்கும்…

