“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5:45…

