வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள்…

Read More

பகலில் பெயிண்டர் – இரவில் வாழை திருடன்! புதுச்சேரி போலீசாரின் சோதனையில் சிக்கினார்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செட்டிபட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் இருந்து வாழைத்தார்கள் அடிக்கடி திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வாழைத்தார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன ஓட்டியை கைது செய்து விசாரித்ததில்,…

Read More

காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!

புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுவையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் ‌கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,…

Read More

சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!

புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு…

Read More