புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!
புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கல்லூரியின் செவிலியர் பிரிவில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைப் பிரிவில் பயிற்சிக்காகச் செல்லும் போது, எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இரண்டு டெக்னீசியன்கள் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்ததையடுத்து, கல்லூரியின்…

