புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More

புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு…

Read More

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

Read More