14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக (PTU) ஓய்வூதியர்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் நலன்கள் வழங்கப்படுவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் இயங்கி வரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நல நிதிகள் வழங்கப்படுவதில்…

