புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!

காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர்…

Read More

எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா தீபாவளி வாழ்த்து!

புதுச்சேரி மாவட்ட காவல் மேலாளர் எஸ்.எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன், ஆனால் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும், பட்டாசுகளை வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, பண்டிகை நாட்களில் விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Read More

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி!

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மக்கள் படையெடுத்து,வருவதால் புதுச்சேரி நகரமே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்குவதற்காக புதுச்சேரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பொதுமக்களின் படையெடுப்பால் நகரப் பகுதி முழுவதும் மனித தலைகளாவே…

Read More

போலி சைக்கிள் நிறுவன மோசடி – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை!

போலி சைக்கிள் நிறுவன மோசடியில் சிக்கிய ஒரு அதிகாரி மட்டுமின்றி பல உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “போலி சைக்கிள் நிறுவனத்திடம் 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு…

Read More