திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read More

புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, உப்பளம், நெல்லித்தோப்பு, உருளையான்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட புதுச்சேரி நகர்ப் பகுதிகளிலும், அதே போல் பாகூர், கண்ணிகோயில், காலாபட்டு, சேதராபட்டு, வில்லியனூர், சோம்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக…

Read More