சென்னையில் திடீர் கனமழை: தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர், எழும்பூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே ‘இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு’ என எச்சரித்திருந்த நிலையில், மாலை நேர போக்குவரத்து உச்சத்தில் மழை ஆரம்பித்தது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். திடீரென மழை தீவிரமடைந்ததால் பல சாலைகளில்…

