சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் இன்று! தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து அவரது ரசிகர்கள் வழிபட்டனர்! புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவதும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை செய்வதும் ரஜினி ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டியும் அவர் கலை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டியும் சிறப்பிக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள்…

