புதுச்சேரியில் செருப்பு வாங்குவது போல் வந்து மிரட்டிய ரௌடி!
புதுச்சேரி: புதுவையின் முத்தியால்பேட்டை, காந்திவீதியில் செருப்புகள் விற்பனை கடைக்கு வந்த நபர், செருப்பை எடுத்துக்கொண்டு பணம் தர முடியாது, ஓசியில் தர வேண்டும் என கேட்டு பணியில் இருந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அப்பொழுது பணம் கொடுத்தால்தான் செருப்பு தருவேன் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார். கடையை கத்தியால் தாக்கிய நபர் அதிக போதையில் இருந்ததாக கூறப்படுகிறது, இங்கு போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது….

