புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மோசடி வழக்கு – குற்றவாளிகளுக்கு 5 மாத சிறைத்தண்டனை
புதுச்சேரி:பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் செய்து, ஒப்பந்ததாரரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் சேதுராமன், தனியார் நிறுவனத்தின் பெயரில் Facebook-ல் வெளியான TMT கம்பிகள் பற்றிய விளம்பரத்தை நம்பி, மொத்தம் ரூ.30,97,000 பணத்தை செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், கம்பிகள் கிடைக்காததால் அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்….

