கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
நெல்லையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய கருத்துகளை முன்வைத்தார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையும், அதன் பண்பாட்டு மரபுகளும் உலகிற்கு வெளிப்படும் வகையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகங்களை பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கீழடி அகழாய்வு, தமிழர் நாகரிகம் சங்க காலத்திற்கு முன்பே…

