திருநள்ளாறில் சோமவார சங்காபிஷேகம் – குவிந்த பக்தர்கள்!

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து…

Read More

பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம்,…

Read More

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு தடை – போலீசார் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், கடற்கரையை ஒட்டிய ஒரே தலமாகவும் திருச்செந்தூர் சிறப்புபெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில் ஜோதிடர் ஒருவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின்படி, “ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இரவு கடற்கரையில் நிலவொளியில் தங்கி, மறுநாள் அதிகாலை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால்…

Read More

கோயிலில் தொலைந்த 4 பவுன் தாலி செயினை கண்டுபிடித்த மேஸ்திரிக்கு பாராட்டுகள்!

புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் மனைவி கீதா தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவரின் கழுத்திலிருந்த 4 பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் இணைந்து நகையைத் தேடும் பணியில்…

Read More

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசல் விபத்து: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபலமான இந்த கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வரவேற்கிறது. இன்று ஏகாதசி நாளையொட்டி வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால், கோவிலின் உள் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த திடீர் நெரிசலில் பலர் மிதிக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More

பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்ட ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த நிலையில் அவரது புதிய திரைப்படமான ‘டீசல்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி, இயக்குனர் சண்முக முத்துசாமி ஆகியோர் திருவண்ணாமலை…

Read More