தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது…

