
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!
இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம், உற்பத்தி முறை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழக்கில், மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனம் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது….