சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்கவும், பாரம்பரிய வாத்திய கருவிகள் இசைக்கவும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த புனித நிகழ்வை உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் முன்னின்று நடத்தி, கொடியேற்றி வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற ஜனவரி 2ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி,…

