
புதுச்சேரியில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா தொடக்கம் – வானில் பறந்து புதுவையின் பசுமை அழகை ரசிக்கும் புதிய அனுபவம்
புதுச்சேரி சுற்றுலா துறை, உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையின் இயற்கை அழகை வானில் இருந்து கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் புதுச்சேரியின் முக்கிய…